இந்தியா பவுண்டேசன் – நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டம்
வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் படி இன்று 21.04.2020 செவ்வாய்கிழமை நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டத்தில் நமது வனம் அமைப்பின் துணைத் தலைவர் திரு. கணேஷ்வர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். வனம் அமைப்பின் தலைவர் திரு. சுவாதி சின்னசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். உடன், வனம் ஊடக துறை இயக்குனர் திரு.TMS பழனிசாமி அவர்கள், வனம் அலுவலர்கள் திரு.பன்னீர்செல்வம் மற்றும் திருமதி.விஜி அவர்கள் கலந்துகொண்டனர். நமது வனம் செயலாளர் திரு.Sky.V.சுந்தரராஜ் அவர்கள் அலைபேசி வழியாக மழை பொழிவு அதிகரித்து உலகில் பசுமை படரவும், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு நீங்கி உலகம் அமைதியடைந்து, தொழில் வளம் பெருகி, பொருளாதாரம் சீரமைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் தவம் இயற்றினார். மத்திய மாநில அரசு ஆணைக்கினங்க சமூக விலகலை கடைபிடித்து இக்கூட்டத்தில் ஐந்து பேர் மட்டும் தக்க பாதுகாப்புடனும், இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
அன்புடையீர்,
வணக்கம்,
வாழ்க! வளமுடன்!